உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் தேவை குறைவு; வாழைத்தார் விலை சரிவு

மழையால் தேவை குறைவு; வாழைத்தார் விலை சரிவு

மேட்டுப்பாளையம்; மழையின் காரணமாக நேந்திரன், கதளி வாழைத்தார்களின் விலைகள் குறைந்துள்ளன. மேட்டுப்பாளையம்---அன்னூர் சாலை நால் ரோட்டில், உள்ள தனியார் வாழைத்தார் ஏல மண்டிக்கு 3000 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இரண்டு வாரத்துக்கு முன், ஒரு கிலோ நேந்திரன் குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம், 42 ரூபாய்க்கும், கதளி குறைந்தபட்சம், 30க்கும், அதிகப்பட்சம், 70 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஆனால் நேற்று நடந்த ஏலத்தில் நேந்திரன் குறைந்தபட்சம், 25க்கும், அதிகபட்சம், 32 ரூபாய்க்கு, கதளி குறைந்தபட்சம், 30க்கும் அதிகபட்சம் 66 ரூபாய்க்கும் ஏலம் போனது. மேலும் பூவன் ஒரு தார் குறைந்தபட்சம், 250, அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 250, அதிகபட்சம், 700க்கும், தேன் வாழை, 300, அதிகபட்சம், 900க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 250, அதிகபட்சம், 850 ரூபாய்க்கும், மொந்தன், பச்சை நாடன், ரோபஸ்டா ஆகிய மூன்று வாழைத்தார், குறைந்த பட்சம், 200 அதிகபட்சம், 500 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதுகுறித்து வாழைத்தார் ஏலம் மண்டி நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்ராஜ் ஆகியோர் கூறுகையில்,' நேந்திரன், கதளி மற்றும் பிற வாழைத்தார்களின் விலை குறைந்துள்ளது. மழை காரணமாக மக்களிடையே பழங்களின் தேவை குறைந்துள்ளன. அதனால் விலையும் குறைந்துள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை