உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிணத்துக்கடவில் மழை நீர் தேக்கம்; துர்நாற்றத்தால் மக்கள் அவதி

கிணத்துக்கடவில் மழை நீர் தேக்கம்; துர்நாற்றத்தால் மக்கள் அவதி

மழைநீரால் பாதிப்பு கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே சர்வீஸ் ரோட்டில் உள்ள கால்வாயில், அதிக அளவில் மழை நீர் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்லும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் கவனித்து தேங்கி நிற்கும் நீரை அகற்ற வேண்டும். - விக்ரம்: புதரால் மக்கம் அச்சம் பொள்ளாச்சி, சின்னம்பாளையம் மின் நகர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மலர்விழி நகரில் குடியிருப்புகளுக்கு நடுவே, தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் அதிகளவு புதர் வளர்ந்துள்ளது. அதனுள், பாம்புகள் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். புதரை அகற்றம் செய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன்: ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? பொள்ளாச்சி, சுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக, ரோட்டை ஆக்கிரமித்த படி அதிகளவு வாகனங்கள் மற்றும் கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், விசேஷ நாட்களில் பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். - சிவா: ரோட்டோரத்தில் குப்பை பொள்ளாச்சி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெருமாள் வீதியில், ரோட்டோரத்தில் பல மாதங்களாக குப்பை அகற்றம் செய்யப்படாமல் மலைபோல் குவிக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து அகற்றம் செய்ய வேண்டும். -- ஜெயபிரகாஷ்: மின்விளக்கு தேவை கிணத்துக்கடவு பள்ளிவாசல் வீதி செல்லும் ரோட்டில் மின் விளக்குகள் இல்லை. இப்பகுதியில் கனிமவள கற்கள் கொட்டப்பட்டிருக்கும் இடத்தில் பாம்புகள் உள்ளது. இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்வதால், இப்பகுதியில் விரைவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். - ஆறுச்சாமி: தரைப்பாலம் சேதம் உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் சிக்னலிலிருந்து ஐயப்பன் கோவில் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இந்த பாலத்தை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும். - மோகன்: போக்குவரத்து நெரிசல் உடுமலை - பழநி ரோட்டில், இருபுறமும் சரக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன்: போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரோடு உடுமலை அருகே பெதப்பம்பட்டி- வெள்ளியம்பாளையம் இணைப்பு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார்: ஆக்கிரமிப்புகளால் நெரிசல் உடுமலை சந்தை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால், அந்த ரோட்டில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முனியாண்டி: இருக்கை வசதி இல்லை உடுமலை தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் போதிய இருக்கை வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இருக்கைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ்: விதிகளை மீறலாமா? உடுமலையில், இருசக்கர வாகனத்தில் விதிமுறைகளை மீறி கம்புகளை எடுத்துச் செல்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் மீது பட்டு, விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - செல்வம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ