உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜகோபுரம் நிலவுக்கால் வைத்தல் விழா: பக்தர்கள் பங்கேற்பு

ராஜகோபுரம் நிலவுக்கால் வைத்தல் விழா: பக்தர்கள் பங்கேற்பு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையம் உள்ளது. இங்கு ஆலூர் தேசி கவுடர் குல மக்களின் குலதெய்வமான தேசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து புதிதாக கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. கோவிலின் ராஜகோபுரம் நிலவுக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு, சண்முகசுந்தரம், விஜயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில் நிர்வாகிகள், குலமக்கள் முன்னிலை வகித்தனர். அர்ச்சகர் சிவா தினேஷ் சிறப்பு பூஜைகள் செய்தார். ராட்சத கிரேன் வாயிலாக ராஜகோபுரத்தில் நிலவுக்கால் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேசிலிங்கேஸ்வரர், தேவம்மாள் சன்னதிகளுக்கு கோபுர கலசம் வைக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை