உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையை வரவேற்கும் ரத சப்தமி யோகாசனம் 

கோடையை வரவேற்கும் ரத சப்தமி யோகாசனம் 

கோவை;கோடைக்காலத்தை வரவேற்கும் 'ரத சப்தமி' யோகா நிகழ்ச்சி, கோவை ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி பகுதியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், 24 பெண்கள் சூரிய நமஸ்கார பயிற்சி செய்தனர்.இது குறித்து, பிராண சக்தி கல்ச்சுரல் சென்டர் இயக்குனர் தீபா கிருஷ்ணகுமார் கூறியதாவது:'ரத சப்தமி' என்பது, கோடை துவங்கும் காலமாகும். கோடை வெயிலை வரவேற்கும் விதமாக, சூரிய நமஸ்காரம் செய்வது வழக்கம். சூரிய நமஸ்காரமே ஒரு ஆசனம் தான். இதில் பத்து வகையான ஆசனங்கள் உள்ளன. இதை 'ரத சப்தமி' என்று சொல்கிறோம். காலை சூரிய உதயத்தின் போது அல்லது மாலை சூரியன் மறையும் போது, இந்த ஆசனங்களை செய்தால், உடல் புத்துணர்ச்சி அடையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நுரையீரல் பலமடைந்து, சுவாசம் துாய்மை அடையும். சளித்தொல்லை இருக்காது. ஆஸ்துமா பிரச்னைகள் நீங்கும். யோகா பயின்றவர்கள், பயிலும் மாணவர்கள், இந்த ஆசனங்களை செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ