ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடைத்தது பாமாயில்
அன்னூர்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, நேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டது. அன்னூர் நகரில் கடந்த 23ம் தேதி வரை ரேஷன் கடைகளில், பாதி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்படவில்லை. ஸ்டாக் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாத துவக்கத்தில் வழங்கப்படும் என, ரேஷன் கார்டுதாரர்களை திருப்பி அனுப்பினர்.இதுகுறித்து அ.மு. காலனி மக்கள் கூறிய புகார், நேற்றைய நமது நாளிதழ் புறநகர் பகுதியில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக அன்னூர் நகரில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் சப்ளை செய்தனர். நேற்று காலை 11:00 மணி முதல், பாமாயில் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.