உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு மாத சம்பளம் போனஸாக தர ரேஷன் பணியாளர்கள் கோரிக்கை

ஒரு மாத சம்பளம் போனஸாக தர ரேஷன் பணியாளர்கள் கோரிக்கை

கோவை; கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்தின் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில், 34 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுகளுக்கு முறையாக போனஸ் வழங்குவதில்லை. 10 பேர் பணியாற்றும் ஒரு கூட்டுறவு சங்கம், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாபத்தில் இயங்கினால், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 16,800 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது. லாபம் இல்லாமல் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 8400 ரூபாய் மட்டுமே போனஸ் தரப்படுகிறது. நஷ்டத்தில் உள்ள சங்கங்களில்ரூ.2400 மட்டுமே தரப்படுகிறது. ரேஷன் கடைகளை பொறுத்தவரை எல்லாமே மானியத்தில் இருந்துதான் செலவிடப்படுகிறது. அதனால் ரேஷன் ஊழியர்கள் மத்தியில் அரசு வித்தியாசம் காட்டாமல், மானியத்தில் இருந்து ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை இந்த ஆண்டு முதல் போனஸாக வழங்க வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை