உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தகம் படிப்பதும், எழுதுவதும் ஒருவரின் ஆயுளை அதிகரிக்கும்

புத்தகம் படிப்பதும், எழுதுவதும் ஒருவரின் ஆயுளை அதிகரிக்கும்

கோவை; கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், பிரம்மநாயகம் எழுதிய 'குற்றாலக் கவியருவி' என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா, வைஷ்ணவி அரங்கில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். டாக்டர் முருகன் நுாலை வெளியிட, எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி சிவக்குமார் நுாலை பெற்றுக்கொண்டார். நுால் குறித்து டாக்டர் முருகன் பேசியதாவது: இந்த நுாலின் ஆசிரியர் பிரம்மநாயகம், ஒருநாள் என் கிளினிக் வந்திருந்த போது, தான் ஒரு கவிஞர் என்று சொன்னார். அப்போது அவரிடம் நான், கவிதை எழுதுவதை நிறுத்தாதீர்கள், புத்தகம் படிப்பதும், எழுதுவதும் ஆயுளை அதிகரிக்கும். மனம் தொடர்ந்து சிந்திக்கும் போது, உடலில் உள்ள நோய்கள் வெளியேறி விடும் என்றேன். தமிழ்மொழிக்கு ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு. தமிழைக் கற்ற யோகிகளும், சித்தர்களும் பல ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழ்ந்துள்ளனர். திருமூலர் மனித ஆரோக்கியம் குறித்து, அற்புதமாக எழுதி இருக்கிறார். தாயின் கருவில் இருக்கும் குழந்தை, முதல் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரை, எப்படி வளர்கிறது என்பதை ஒரு மருத்துவ விஞ்ஞானி போல், சிந்தித்து எழுதி இருக்கிறார்.மனித வாழ்க்கையை பற்றி, திருவள்ளுவர் எல்லாம் எழுதி விட்டார். நமது பக்தி இலக்கியங்களில் சொல்லப்படாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை.தமிழ் மொழி, 2,000 ஆண்டுகளை கடந்து இன்றும் வாழ்கிறது என்றால் தமிழை படிப்பவர்களும், எழுதுபவர்களும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.கவிஞர்கள் சுந்தரராமன், தன்மானம், சிவக்குமார், மைதிலி யோகராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி