கிராமத்து வஞ்சரம் மீன் குழம்பு
தேவையன பொருட்கள்:
வஞ்சரம் மீன் - அரை கிலோசின்ன வெங்காயம் -15 --20பழுத்த தக்காளி - ஒன்று மாங்காய் துண்டுகள் - ஐந்துபூண்டு பற்கள் - ஐந்துபுளி - எலுமிச்சை அளவுமஞ்சள் துாள் - அரை ஸ்பூன்மிளகாய் துாள் - இரண்டு ஸ்பூன்கொத்தமல்லி துாள் - மூன்று டீஸ்பூன்கடுகு - கால் டீஸ்பூன்வெந்தயம் - கால் டீஸ்பூன்நல்லெண்ணெய் - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - சுவைக்கேற்ப செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியுடன, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.தற்போது அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, சூடாக்கி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை போட்டுக்கொள்ளவும்.கடுகு வெடித்ததும் தட்டிய பூண்டு பற்களை போட்டு வதக்கவும். பின்னர் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் மஞ்சள் துாள், மிளகாய் துாள் மற்றும் கொத்தமல்லி துாளை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றிக்கொள்ளவும்.பின்னர் அதில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.குழம்பு ஓரளவிற்கு கொதித்ததும் கழுவி வைத்துள்ள மீன் மற்றும் மாங்காயை துண்டுகளை போட்டு கொள்ளுங்கள். பின்னர் மண் சட்டியை மூடி போட்டு, மிதமான தீயில் அவற்றை வேகவிடவும்.மாங்காய் மற்றும் மீன் துண்டுகள் முழுமையாக வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும். தற்போது, சுவையான கிராமத்து வஞ்சரம் மீன் குழம்பு தயார்!