உள்ளூர் செய்திகள்

சிக்கன் லாலிபாப்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோமுட்டை - ஒன்றுபெரிய வெங்காயம் - ஒன்றுசோள மாவு - ஒரு கப்ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவுமைதா மாவு - மூன்று ஸ்பூன்பூண்டு பல் - ஐந்துஇஞ்சி - சிறிதளவுசோயா சாஸ் - இரண்டு டேபிள் ஸ்பூன்தக்காளி கெட்சப் - இரண்டு டேபிள் ஸ்பூன்ஸ்செஷ்வான் சாஸ் - மூன்றுவினிகர் - இரண்டு டேபிள் ஸ்பூன்கருப்பு மிளகு துாள் - சிறிதளவுசர்க்கரை - தேவையான அளவுமிளகாய் துாள் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்த வைத்துக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும். கழுவிய சிக்கனை லாலிபாப் ரெசிபிக்கு ஏற்றவாறு தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கன் மற்றும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாய், வினிகர், கருப்பு மிளகு துாள், மிளகாய் துாள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் வேறு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, மிளகாய் துாள், ஒரு முட்டை மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்பு ஊற வைத்த சிக்கன் கலவையை எடுத்து, இந்த மாவு கலவையில் போட்டு நன்கு கிளறவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். எல்லா பக்கங்களும் நன்றாக வேகும் வரை பொரித்து எடுக்கவும். பின்னர் வேறு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். இதனுடன், நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் அதில் சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், வினிகர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தண்ணீரில் கட்டியில்லாமல் சோள மாவை கரைத்து அதனை கடாயில் ஊற்றி கிளறவும். இந்த மசாலா சிறிது கெட்டியானதும் அதில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவோடு ஒட்டுமாறு அதை சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி விடவும். பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை போட்டு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் லாலிபாப் மசாலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ