உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆறு கேரள ரயில்கள் கோவைக்கு வராமல் திருப்புவதற்கு பரிந்துரை

ஆறு கேரள ரயில்கள் கோவைக்கு வராமல் திருப்புவதற்கு பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை சந்திப்பை ஏற்கனவே, பல கேரள ரயில்கள் புறக்கணித்து வரும் நிலையில், மேலும் 6 ரயில்களை கோவைக்கு வராமல் திருப்புவதற்கு, பரிந்துரை தயார் செய்யப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4lw8pg62&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளாவிலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள், கோவை வழியாகவே கடந்து செல்கின்றன. இந்த ரயில்கள் இயக்கப்பட்ட காலத்திலிருந்து, கோவை சந்திப்பு வழியாகவே இயக்கப்பட்டு வந்தன. ஆனால், வடகோவை - இருகூர் இருவழிப்பாதை பணிகளைக் காரணம் காட்டி, 13 ரயில்கள், போத்தனுார் வழியே கேரளாவுக்கு இயக்கப்பட்டன.போகும் போதும், வரும்போதுமாக மொத்தம் 26 ரயில் சேவைகளில், கோவை சந்திப்பு புறக்கணிக்கப்பட்டது.2012ல் இந்தப் பணி முடிவடைந்த பின்னும், கேரளா ரயில்கள், கோவை சந்திப்புக்குத் திருப்பப்படவில்லை. இந்த ரயில்களைத் திருப்புவதையே, முக்கியக் கோரிக்கையாக வைத்து, ரயில்வே போராட்டக்குழு துவங்கப்பட்டது.தொடர் போராட்டங்களால், 13 ரயில்களில் முக்கியமான நான்கு ரயில்கள் திருப்பப்பட்டு, மற்ற ரயில்கள் அடுத்தடுத்து கோவை சந்திப்புக்கு திருப்பப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஏழு ரயில்கள் இரு வழியான சேவைகளிலும், ஒரு ரயில் ஒரு வழிச் சேவையிலுமாக, 15 ரயில் சேவைகளில் கோவை சந்திப்பு, இன்று வரை புறக்கணிக்கப்படுகிறது.கோட்டயம்-சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் எகஸ்பிரஸ், டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ், ஹூப்ளி-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இரு வழிகளிலும், மங்களூரு-தாம்பரம் ரயில் ஒரு வழியிலும், கோவை சந்திப்புக்கு வராமல் செல்கின்றன.இவற்றை, கோவை சந்திப்பு வழியாக இயக்க வேண்டுமென்று, கோவையிலுள்ள தொழில் அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் 28ம் தேதியன்று, சேலம் கோட்டத்துக்குட்பட்ட எம்.பி.,க்கள் கூட்டத்துக்கான தீர்மானங்களில், மேலும் ஆறு கேரளா ரயில்களை, கோவைக்கு வராமல் திருப்புவதற்கான பரிந்துரை இடம் பெற்றுள்ளது.ஆழப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், கன்யாகுமரி-திர்புர்கார் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பாட்னா, கொச்சுவேலி-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம்-பாட்னா வாரமிரு முறை ரயில் ஆகிய ஆறு ரயில்களை, கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனுார் வழியே திருப்புவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த ரயில்களில், பல்லாயிரக்கணக்கான பயணிகள், கோவை சந்திப்பிலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு மற்றும் வட மாநில நகரங்களுக்குச் செல்கின்றனர். போத்தனுார் வழியே செல்லும் 15 கேரள ரயில்களை, கோவைக்குத் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கைக்கு மாறாக, மேலும் 6 ரயில்களைத் திருப்புவதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரைத்திருப்பது, கோவை மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.-நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Ranjith Rajan
பிப் 24, 2024 11:07

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதும், அவர்களின் மருத்துவ கழிவுகளை இங்கே வந்து கொட்டுவதும்.. பணத்தாசையால் தமிழக அதிகாரிகள் அதற்கு உடன்படுவதும் காரணம்.. அதே தான் ரயில்வேயிலும் நடக்கிறது.. ரயில்வே இல் அணைத்து மேலிட பொறுப்புகளிலும் மலையாளிகள் நிறைந்துள்ளார்கள்.. கேரளாவுக்கு சாதமாகவே நடந்து கொள்வர்.. ரயில்கள் நின்று போக செய்தாலும் பயணிகள் முன்பதிவு கோட்டா கேரளாவுக்கு சாதகமாக வைத்து விடுவார்கள். கோவையிலிருந்து டிக்கெட் கிடைக்காது... அந்த ரயில்களை நிறுத்தாமல் கோவையில் இருந்து கிளம்பும் புதிய ரயில்களை கேட்கலாம்


katharika viyabari
பிப் 23, 2024 13:20

சேலம் கோட்டத்தில் இருப்பவர்கள் சேலை கட்டிக்கிட்டு இருக்கலாம்.


g.s,rajan
பிப் 22, 2024 21:13

நமது நாட்டின் பாராளுமன்றக் கேன்டீனில் சாப்பிடத்தான் நமது எம்.பிக்கள் லாயக்கு.போங்க ,போய் நல்லா வயித்துக்கு வஞ்சனை இல்லாமல் வயிறு முட்டச் சாப்பிடுங்க....


Dharmavaan
பிப் 22, 2024 20:36

பரிந்துரை செய்தவர் பட்டியல் வேண்டும்


ELLAPPARAJ
பிப் 22, 2024 20:06

இது மிகவும் நல்ல விஷயம். கேரளா செல்லும் அனைத்து ரயில்களையும் போத்தனூர் வழியாக திருப்பி விட்டுவிட்டால் கோவை ரயில்நிலையத்தில் இடைஞ்சல் குறையும். இந்த ரயில்களுக்கு மாற்றாக கோவையில் இருந்து கிளம்பும்படியாக பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில்கள் விட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேரளாக்காரர்கள் மொத்த கோட்டாவையும் வைத்துக்கொண்டு கோவைக்கு 30 சீட் 50 சீட் பிச்சை போடுவதைவிட இங்கிருந்து ரயில்கள் கிளம்பினால் பயனுள்ளதாக இருக்கும்.


Jay
பிப் 22, 2024 18:42

தமிழ்நாட்டு எம்பிகள் தல அம்பது கோடி நூறு கோடி செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சொல்கின்றனர் செலவு செய்த காசை எப்படி வசூல் செய்வது என்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கும். ட்ரெயினை பத்தி அவர்களுக்கு என்ன கவலை?


katharika viyabari
பிப் 22, 2024 18:40

சின்ன விஷயம் இது. கோவை வழியே போகாத ரயில்களை தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தால் போதும்.


M Ramachandran
பிப் 22, 2024 17:13

பொள்ளாச்சியாய் பாலகாட்டிலிருந்து பிரித்து சேலம் கோட்டத்கில் இணைக்க வேண்டும்


Kundalakesi
பிப் 22, 2024 14:56

Coimbatore doesn't have proper night train service to Bangalore and North india. Real requirements should be checked and implemented. Also train service should be resumed to Madurai n Rameshwaram. Additional weekend trains to Chennai, Bangalore, Tirunelveli required


Svs Yaadum oore
பிப் 22, 2024 13:23

ஏற்கனவே அந்த தடத்தில் இருந்த ரயில்களை பணி முடிந்த முன்பு கோவைக்கு திருப்ப சொல்லித்தான் போராட்ட குழு அமைக்கப்பட்டது..அதைத்தான் கோவை தொழில் அமைப்பினர், மக்கள் பிரதிநிதிகள் கேட்கிறார்கள் ...அந்த ரயில்களில் கோவையில் பயணிகள் இல்லை நஷ்டம் நேர விரயம் என்று சேலம் கோட்டத்துக்குட்பட்ட எம்.பி.,க்கள் கூட்ட தீர்மானம் சொல்லுதா ??.....அப்படி இருந்தால் அதற்கு ஆதாரத்தை எம்.பி.,க்கள் கொடுக்கட்டுமே ....எந்த அடிப்படையில் அந்த எம்.பி.,க்கள் கூட்ட தீர்மானம் முடிவு செய்தது ??....


புதிய வீடியோ