மேலும் செய்திகள்
குளிர்பதன கிடங்கை திறக்க நல்ல நாள் கிடைக்கலையோ
30-Oct-2025
கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறப்பவர்களில் சந்தேக மரணம், விபத்து, கொலை, போக்சோ போன்ற மரணங்களில், பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக, 10 முதல் 13 பிணக்கூறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்களை, பிரேத பரிசோதனைக்கு முன் பாதுகாப்பாக வைக்க, வசதிகள் இல்லாமல் இருந்தன. ரூ.81 லட்சத்தில் பிரத்யேக குளிர்பதன கிடங்கு வசதி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''பிரத்யேக குளிர்பதன கிடங்கில், 21 உடல்களை பாதுகாப்பாக வைக்க முடியும். அறையின் குளிர்நிலையை தொடர்ந்து கண்காணிக்க, சென்சார் பொருத்தப்பட்டுள்ளன. மின்சாரம், ஏ.சி., போன்ற வசதிகளுக்கு மட்டும், 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது,'' என்றார்.
30-Oct-2025