சி.ஐ.ஐ., சார்பில் மண்டல அளவிலான கிரிக்கெட்
கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.,) கோவை மையம் சார்பில், இரண்டாவது பதிப்பு மண்டல கிரிக்கெட் லீக் போட்டி, பல்வேறு மைதானங்களில் நடந்தது.கடந்த, 5, 6 மற்றும், 12, 13ம் தேதிகளில் நடந்த இப்போட்டியானது, தொழிலாளர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில் நிறுவனங்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் இடம்பெற்றது.நிறைவில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன் அணி முதல் பரிசையும், பிரிக்கால் லிட்., அணி இரண்டாம் இடத்தையும், கில்பர்கோ வீடர் ரூட் இந்தியா லிட் மூன்றாம் இடத்தையும் வென்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, சி.ஐ.ஐ., கோவை முன்னாள் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.