உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் குவித்த கட்டடக்கழிவு அகற்றம்

ரோட்டோரத்தில் குவித்த கட்டடக்கழிவு அகற்றம்

வால்பாறை; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாலையோரங்களில் கொட்டப்பட்ட கட்டடக்கழிவு அகற்றப்பட்டது.வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட பழைய கட்டட கழிவுகளை, லாரியில் கொண்டு வந்து பொள்ளாச்சி ரோட்டோரத்தில் குவிக்கின்றனர்.குறிப்பாக, வால்பாறையில் இருந்து சோலையாறுடேம், புதுத்தோட்டம், கருமலை உள்ளிட்ட பகுதியில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை ரோட்டோரத்தில் விதிமுறையை மீறி கட்டடக்கழிவு கொட்டப்படுகின்றன. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியிடபட்டது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், வால்பாறை - கருமலை ரோட்டோரத்தில் கொட்டப்பட்ட கட்டடக்கழிவை பொக்லைன் வாயிலாக அகற்றும் பணி நடந்தது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை