உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பு அகற்றம்; பட்டணத்தில் அதிரடி

ஆக்கிரமிப்பு அகற்றம்; பட்டணத்தில் அதிரடி

சூலுார் : பட்டணத்தில் ஏழு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை வருவாய் துறையினர் அதிரடியாக அகற்றினர்.சூலுார் அடுத்த பட்டணம் ஊராட்சியில் திருக்குமரன் நகர், வி.ஐ.பி., நகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் பொதுப்பாதையின் ஒரு பகுதியை, தனி நபர், ஏழு ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடை கட்டியிருந்தார். குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையிடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், பலன் ஏதும் இல்லை.இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.விசாரணையின் இறுதியில், ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. சங்கத்தினர் கோர்ட்டில் மீண்டும் முறையிட்டனர்.இதையடுத்து, சூலுார் தாசில்தார் தனசேகர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கங்கா ராஜ், கிராம நிர்வாக அலுவலர் லோக நாயகி ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட பகுதி இடித்து அகற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ