உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெ.நா.பாளையம்: மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கவுண்டம்பாளையம், ஜி.என்., மில்ஸ் பிரிவு, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, பிரஸ்காலனி, காரமடை, டீச்சர்ஸ் காலனி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவு உள்ளன. ரோட்டில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட தற்காலிக நிழற்குடைகள், சிமெண்ட் திட்டுகள், கடைகள் உள்ளிட்டவைகளை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் இதுவரை மூன்று முறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர். பல இடங்களில் ஆக்கிரமிப்பு நீடித்ததால், நேற்று காலை ஜி.என்., மில்ஸ் பிரிவு, வெள்ளக்கிணறு பிரிவு, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட மேட்டுப்பாளையம் ரோட்டில் கடைகளின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு இருந்த விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில்,' கடந்த வாரம் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கும். ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் செலவு அவர்களிடமே வசூல் செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி