| ADDED : ஜன 30, 2024 12:33 AM
பேரூர்;ஆறுமுககவுண்டனூரில், பயணிகள் நிழற்குடை சேதமடைந்து, இடிந்து விழும் அபாயமான நிலையில் உள்ளது.பேரூர் செட்டிபாளையம் -- கோவைப்புதூர் செல்லும் ரோட்டில், ஆறுமுககவுண்டனூர் அரசு பள்ளி அருகில், பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை அமைத்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.இதனால், நிழற்குடைக்குள்ளே, கான்கிரீட் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால், தற்போது, பயணிகள் நிழற்குடை சேதமடைந்து, பலவீனமான உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.இதன் அருகிலேயே அரசு பள்ளியும் உள்ளது. பள்ளி முடிந்த பின் மாலையில், குழந்தைகள் இங்கு காத்திருந்து பஸ் ஏறுகின்றனர்.அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், இந்த பழைய நிழற்குடையை இடித்து அகற்றி, புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.