உருக்குலைந்த மின்கம்பங்களை மாற்றணும்! கொண்டைக்கடலை சாகுபடியை துவங்க விவசாயிகளுக்கு அறிவுரை அதிகாரிகளே இதையும் கவனியுங்க
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில், பல இடங்களில் மின் கம்பங்களின் கான்கிரீட் பூச்சுக்கள் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் படி உள்ளன. சில இடங்களில் கம்பத்தின் அடிப்பகுதியும் சேதமடைந்து காணப்படுகிறது.பல பகுதிகளில், சேதமடைந்த பழைய மின்கம்பமே தற்போது வரை உள்ளது. இதற்கு இன்னும் மாற்று ஏற்பாடுகள் இல்லை.கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் தனியார் பங்க் அருகே உள்ள மின் கம்பத்தின் மேல் பகுதி சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் மின் ஒயர்கள் அறுந்த நிலையில் ஒரு ஆண்டாக உள்ளது.லட்சுமிநகர் பகுதியில் தனியார் லே - அவுட் அருகே உள்ள மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிபாளையம் செல்லும் வழியில் உள்ள இரண்டு மின்கம்பங்களின் கான்கிரீட் பூச்சுக்கள் சேதமடைந்துள்ளது. இதே ரோட்டில் உள்ள கம்பத்தில் உள்ள மின் பெட்டியும் சேதமடைந்து காணப்படுகிறது.இந்த மின்கம்பங்கள் அருகே, ரோடு மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை கண்டறிந்து விரைவில் மாற்றம் செய்ய வேண்டும்.மக்கள் கூறியதாவது:கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், சேதமடைந்த மின்கம்பங்கள் அதிகம் உள்ளன. இதை மாற்றம் செய்யக்கோரி பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை மாற்றம் செய்யவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தான், மின்கம்பத்தை மாற்றியமைப்பார்களா என்பதும் தெரியவில்லை.வீட்டு மின் இணைப்பில் பழுது ஏற்பட்டாலே, லைன்மேனுக்கு பணம் கொடுத்தால் தான் சரி செய்யப்படுகிறது. இந்நிலையில், மின்கம்பத்தை மாற்றவும் மக்களிடம் ஏதாவது எதிர்பார்க்கிறார்களா என்பது தெரியவில்லை.மக்கள் பிரச்னை உணர்ந்து, மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த மின்கம்பதை கணக்கெடுத்து, உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.