உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய மொபைல்போன் வழங்க கோரிக்கை 

புதிய மொபைல்போன் வழங்க கோரிக்கை 

பொள்ளாச்சி; அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய மொபைல்போன் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக்கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது. குறிப்பாக, இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முன்பருவக்கல்வி கற்று தரப்படுகிறது. அவ்வகையில், பணியாளர்களுக்கு, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படும் தகவல், கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்குவது, வளரிளம் பெண்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்குவது போன்ற தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றும் செய்ய மொபைல்போன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மொபைல்போன் வழங்கி, ஓராண்டு கடந்த நிலையில், தொடர் பயன்பாடு காரணமாக, அதன் செயல்பாடு முற்றிலும் குறைந்துள்ளது. அவற்றை முறையாக பயன்படுத்த முடியாமல், பணியாளர்கள் திணறி வருகின்றனர். அதற்கு மாற்றாக புதிய மொபைல்போன் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறுகையில், ''புதிய மொபைல்போன் வழங்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. துறை ரீதியான உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை