உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழிகாட்டுதல் வழங்க கோரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழிகாட்டுதல் வழங்க கோரிக்கை

கோவை; விடைத்தாள் மதிப்பீடு விஷயத்தில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு, மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், பள்ளி கல்வி இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் ஆகியோரிடம் அளித்த மனு:கோவை மாவட்டத்தில், விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் மதிப்பீடு செய்வதற்கு விரும்பிய மையங்களுக்கு அனுமதி அளித்திட, முதுகலை ஆசிரியர்கள் அனுமதி கேட்டும், கல்வி அலுவலர் நிராகரித்துள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், மதிப்பீடு செய்வதற்கு மெட்ரிக் ஆசிரியர்களுக்கு, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து, கோவை கல்வி மாவட்டத்திற்கு மதிப்பீடு பணியில் ஈடுபட வந்த, 50 ஆசிரியைகளை பல மணி நேரம் காக்க வைத்து, பின்னர் மதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்காமல், திரும்ப அனுப்பிய நிகழ்வு வருத்தமளிக்கிறது.மதிப்பீட்டு பணிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளிக்கும் சூழலில், இவ்வாறான நடைமுறைக்கு உரிய வழிகாட்டுதல் அளித்து, தீர்வு காண உடனடியாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி