மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை
11-Jan-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், பழுதடைந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விபத்து மற்றும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் போலீஸ் சார்பில் முக்கிய சாலை, விபத்து நடக்கும் இடம் மற்றும் குற்ற செயல்கள் நடக்கும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இதில், கிணத்துக்கடவு பகுதியில் கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பழுதடைந்துள்ளது.மேலும், சில இடங்களில் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், சேதமடைந்து கீழே தொங்கிய நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்து போன்ற செயல்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது.எனவே, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் போலீசாரால் கேமரா பொருத்தப்பட்ட பகுதிகளில், அவ்வப்போது கவனித்து முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
11-Jan-2025