மேலும் செய்திகள்
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
10-Apr-2025
பொள்ளாச்சி : விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது, சில நேரங்களில், அரசு டவுன் பஸ்கள், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படுவதால் பயணியர் வேதனை அடைகின்றனர்.பொள்ளாச்சி நகரில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு 70க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, கிராமங்களில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் பயனடைந்து வருகின்றனர்.இதற்காக, ஒவ்வொரு பஸ்சும், குறிப்பிட்ட வழித்தடத்தில் குறித்த நேரத்தில் கிராமங்களைச் சென்றடையும் வகையில் காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்களின் போது, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்போது, சில டவுன் பஸ்கள், 'மப்சல்' பஸ்சாக, தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் பயணிக்கும் பயணியர் உட்காரவும், நிற்கவும் முடியாமல் திணறுகின்றனர்.பயணியர் கூறியதாவது:ஏற்கனவே, போதிய பராமரிப்பின்றி டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில், விசேஷ நாட்களின் போது, கூட்ட நெரிசலை தவிர்க்க, டவுன் பஸ்கள், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.சொந்த ஊர் திரும்ப வேண்டுமே என்ற நிலையில், அந்த பஸ்சில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த பஸ் சென்றவடைதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. பயணியருக்கும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இத்தகைய திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
10-Apr-2025