உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறை; வால்பாறையில், குடியிருப்பு பகுதி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில், காமராஜ்நகர், கக்கன்காலனி, நகராட்சி குடியிருப்பு உள்ளிட்ட பகுதியை ஒட்டி நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வால்பாறையில் தற்போது காற்றுடன் கனமழை பெய்யும் நிலையில், ஆபத்தான மரங்களால் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'வால்பாறையில், கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக வருகிறோம். வீடுகளின் பின்புறம் அதிக வசித்து உயரத்துக்கு வளர்ந்துள்ள ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டக்கோரி, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.குடியிருப்பு பகுதியை ஒட்டி ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டி அகற்றிய பின், அதற்கு மாற்றாக, அதே பகுதியில் புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்யலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை