உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை

வால்பாறை; வால்பாறை நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கயை ஏற்று, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 50 பக்தர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கும் வகையில், அன்னதான திட்டத்தை துவங்கினார். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின், அன்னதான திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை, 25 என குறைக்கப்பட்டது. இதனால், வயதான முதியவர்கள், ஆதரவற்றவர்கள் அன்னதானம் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.பக்தர்கள் கூறியதாவது: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் அனைத்து விழாக்களும்முருகபக்தர்கள் சார்பில் நடத்தப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான, 18 கடைகளில் வசூலாகும் வாடகை பணம் மற்றும் கோவில் உண்டியல் பணமும், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு செல்கிறது.ஆனால், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை, 25 என குறைக்கப்பட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. எனவே, வரும் புத்தாண்டு முதல் மீண்டும், 50 பேருக்கு அன்னதானம் வழங்கும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ