உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரக வளர்ச்சி துறையில் பணியிடம் நிரப்ப கோரிக்கை

ஊரக வளர்ச்சி துறையில் பணியிடம் நிரப்ப கோரிக்கை

சூலுார் : 'ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளரிடம் அளித்த மனு விபரம் :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை மேற்கொள்ள, தனியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை ஒன்றிய வாரியாக ஏற்படுத்த வேண்டும். பெரிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர், இரவு காவலர், ஓட்டுனர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், ஊராட்சி செயலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, கோட்ட வளர்ச்சி அலுவலகம் போன்ற கட்டமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். உதவி பொறியாளர்கள், ஒன்றிய பொறியாளர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரமும் வழங்க வேண்டும். இள நிலை உதவியாளர்கள் பதவி உயர்வு வழங்குவதில் உள்ள கால தாமதத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ