உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோர பள்ளத்தை சமப்படுத்த கோரிக்கை

ரோட்டோர பள்ளத்தை சமப்படுத்த கோரிக்கை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் ரோட்டோர பள்ளத்தை சமப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர். கிணத்துக்கடவு, அரசம்பாளையம் செல்லும் ரோட்டில் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால், இவ்வழியில் பைக் முதல் டிப்பர் வரை வரை, அனைத்து வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த குறுகலான ரோட்டின் ஓரத்தில் இரு புறத்திலும் பள்ளம் இருப்பதால், வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. வாகனத்தை 'ஓவர் டேக்' செய்ய முடிவதில்லை. 'ஓவர் டேக்' செய்யும் பட்சத்தில் ரோட்டோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழும் நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் அல்லது ரோட்டோர பள்ளத்தை மூடி, சமப்படுத்த வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை