உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனைத்து நீரோடைகளையும் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

அனைத்து நீரோடைகளையும் துார்வாரி பராமரிக்க கோரிக்கை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள நீரோடைகளை சுத்தம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர். கிணத்துக்கடவில் இருந்து, கோதவாடி செல்லும் வழியில் கோடங்கிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நீரோடையில், செடிகள் முளைத்து தண்ணீர் செல்லும் பாதைகளில் தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக, நீரோடை சுத்தம் செய்யும் பணிகள் நடக்கிறது. இதே போன்று, பல ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் உள்ள நீரோடைகளில், செடிகள் முளைத்து, சுத்தம் செய்யாமல் இருப்பதால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலையில் இருக்கிறது. இதனால், நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கிறது. விளைநிலத்திற்கு போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நீரோடைகளை, ஒன்றிய நிர்வாகம் சார்பிலோ அல்லது வேளாண் பொறியியல் துறை சார்பிலோ சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை