தரைப்பாலம் சேதம் சீரமைக்க கோரிக்கை
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் செல்லும் ரோட்டோரம் கால்வாய் தரைபாலம் சேதமடைந்துள்ளது. கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் இருந்து சொலவம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமானோர் வாகனங்களில் பயணிக்கின்றனர். இங்கு, டாஸ்மாக் மதுக்கடை அருகே, குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள, கால்வாய் தரைப்பாலம் நீண்ட நாட்களாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால், குடியிருப்பு பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இவ்வழியில் இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். எனவே, தரைப்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டுமென, பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.