உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து ஆண்டியூர், உப்பிலியபுதுார் கிராமங்கள் வழியே மீண்டும் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து, 85 அரசு டவுன் பஸ்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் கிராமங்கள் வழியே கடந்து செல்லும் இந்த டவுன் பஸ்களை நம்பியே மக்கள் பயணிக்கின்றனர்.பல மாதங்களாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழித்தடம் எண் '57ஏ' மற்றும் '58' அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராம மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சியில் இருந்து, இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் (வழித்தட எண் 58), ஆண்டியூர், பாண்டியன்கரடு கிராமங்களுக்கு சென்று திரும்பியது. இதேபோல, வழித்தட எண் 57ஏ பஸ், உப்பிலியபுதுார் சென்று, அங்கிருந்து வலப்புறமாக திரும்பி சோமந்துரைசித்துார் வரை இயக்கப்பட்டு வந்தது.மேலும், ஒரு 'டிரிப்' ஆழியாறுக்கும் இயக்கப்பட்டது. இந்த பஸ்களின் இயக்கத்தால், கிராம மக்கள் பெரிதும் பயனடைந்தனர். ஆனால், இரு பஸ்களும், பல மாதங்களாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படாமல் உள்ளது. மீண்டும் பஸ் இயக்கத்தை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ