நிலவேம்பு கஷாயம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
போத்தனூர்: கொரோனா பாதிப்பை தவிர்க்க, நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி, கோவை, மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள நாகசக்தி அம்மன் பீடம் சார்பில் நடந்தது.பீடத்தின் நிறுவனர் சிவசண்முகசுந்தர பாபு சுவாமி, பீடத்திற்கு வந்திருந்த, 500க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கஷாயம், கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முறைகள் அடங்கிய குறிப்பேடு, மாஸ்க் ஆகியவற்றை வழங்கினார்.தொடர்ந்து சித்தா, ஆயுர்வேத டாக்டர் உமாமகேஸ்வரி மற்றும் மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சிவசண்முகசுந்தர பாபு சுவாமி கூறுகையில், ''கொரோனாவை தவிர்க்க, மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மாநிலம் முழுவதும் நிலவேம்பு கஷாயம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கூறினார்.