ராயல் கேர் மருத்துவமனையில் ஆராய்ச்சிமுறை பயிலரங்கு
கோவை, : ராயல் கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு சார்பில், ஒரு நாள் ஆராய்ச்சிமுறை விளக்க பயிலரங்கம், மருத்துவமனை அரங்கில் நடந்தது. ராயல்கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன் கூறுகையில், ''மருத்துவ அறிவியல் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சிகளின் பங்கு மிக முக்கியமானது. மருத்துவர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை மேம்படுத்திக்கொண்டு, வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். இப்பயிலரங்கில், டில்லி வி.எம்.எம்.சி., மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை துறைத்தலைவர் அனிர்பான் ஹோம் சதுரி, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் கபில் தேவ் சோனி, அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் பவுண்டேஷன் இயக்குனர் டாக்டர் ஸ்ரேயா சட்டோபாத்யாய் உள்ளிட்டோர் பங்கேற்று மருத்துவ ஆராய்ச்சி முறைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து விளக்கமளித்தனர். ராயல்கேர் மருத்துவமனை தீவிர சிகிச்சை மருத்துவத்துறை தலைவர் சிவக்குமார் மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.