உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருவாய்த்துறை அலுவலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

கோவை;கோவை கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், இரண்டாம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், சான்றிதழ் வழங்கும் பணிக்கு கூடுதலாக துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்துதல் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகம், தெற்கு, வடக்கு கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்களில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் நேற்று முன்தினம் துவங்கியது; நேற்றும் தொடர்ந்தது.கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள், பணியை புறக்கணித்து, புதிய கட்டடத்தின் தரைத்தளத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம், வரும் 26ம் தேதி வரை தொடரும்; 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கின்றனர்.நேற்று நடந்த போராட்டத்தில், மாவட்ட துணை தலைவர் சையது உசேன், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி