உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருவாய் மாவட்ட ஸ்குவாஷ் போட்டி: புதிய விளையாட்டில் அசத்திய வீரர்கள்

வருவாய் மாவட்ட ஸ்குவாஷ் போட்டி: புதிய விளையாட்டில் அசத்திய வீரர்கள்

கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு 'ஸ்குவாஷ்' போட்டி, பூசாரிபாளையத்தில் உள்ள அகாடமியில் நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 60 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் போட்டிகளை துவக்கிவைத்தார். மாணவர்கள் ஒற்றையர் பிரிவில்(14 வயதுக்குட்பட்ட) கர்ண வீரா, தீபக் குமார், ரிஷிக் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கிளாட்வின் ஜோஸ், சுபாஷ், தீபேஸ் ஆகியோரும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஸ்ரீஜித், சிவசங்கர், பிரசாந்த் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். இரட்டையர் பிரிவில்(14 வயதுக்குட்பட்டோர்) கர்ண வீரா-அஸ்வின் பிரதா ஜோடியும், நவீன்-தருண் ஜோடி முதல் இரு இடங்களை பிடித்தன. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கிளாட்வின் ஜோஸ்-ஜெரால்டு மேத்யூ ஜோடி, முதலிடம் பிடித்தது. மாணவியருக்கான, 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில்(ஒற்றையர்) பெனிதா பாப்பி, சத்தியாஸ்ரீ, ரிதன்யாஸ்ரீ ஆகியோரும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனிஷ்கா, தரிகா, சனா ஆகியோரும், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஹர்ஷினி, நேத்ரா, வர்ஷினி ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இரட்டையர் பிரிவில்(14 வயதுக்குட்பட்ட) சத்யாஸ்ரீ-ஹரினி ஜோடி, அக் ஷிதா-ஆருத்ராஸ்ரீ ஜோடியும், ரிதன்யா-பிளாசி அல்வினா ஜோடி முதல் மூன்று இடங்களை பிடித்தன. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனிஷ்கா-சன்மதி ஜோடி, மிதுஜா-சனா ஜோடி, தரிகா-ஸ்னேகா ஜோடி ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ