உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க. அலுவலகத்தில் ரகளை; முன்னாள் போலீஸ்காரர் கைது

தி.மு.க. அலுவலகத்தில் ரகளை; முன்னாள் போலீஸ்காரர் கைது

கோவை; தி.மு.க., அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ்காரர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க., கிளை அலுவலகம் உள்ளது. இங்கு வரும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்தித்தாள்கள் படிப்பது, கேரம் விளையாடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அங்கு தி.மு.க., -வினர் கேரம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் அவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு யாரும் விளையாடக்கூடாது எனக் கூறி, அவர்களை வெளியேற்றி விட்டு அலுவலக ஷட்டரை மூட முயன்று ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ரத்தினபுரி பெரியசாமி லே-அவுட்டை சேர்ந்த வினோத்குமார், 45 எனத் தெரிந்தது. வினோத்குமார் கோவை மாநகர போலீஸில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து, டிஸ்மிஸ் ஆனவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் பிணையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி