உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம்

 டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நெ.10.முத்தூர் ரோட்டின் வளைவு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம் உள்ளது. கிணத்துக்கடவு, நெ.10.முத்தூர் செல்லும் ரோட்டில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளை வாகனங்களில் அழைத்து செல்வார்கள். இந்நிலையில், இந்த ரோட்டின் வளைவு பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இரவு நேரத்தில், கனரக வாகனங்கள் சென்றால் டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதியில் மின்விளக்கும் இல்லை. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இப் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்து, தெருவிளக்குகள் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்