உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்கம்பங்களில் விளம்பர பலகை விபத்துகள் ஏற்படும் அபாயம்

மின்கம்பங்களில் விளம்பர பலகை விபத்துகள் ஏற்படும் அபாயம்

உடுமலை; உடுமலை நகரம் மற்றும் கிராமங்களில், அனைத்து மின்கம்பங்களும் விளம்பர பலகைகள் மாட்ட பயன்படும் ஸ்டாண்டாக மாற்றப்பட்டுள்ளன.இத்தகைய பலகைகள், கம்பத்தின் மையப்பகுதியில், கட்டப்படுவதால், பழுது நீக்குவதற்காக, மின்கம்பத்தில் ஏற ஊழியர்கள் திணற வேண்டியுள்ளது.மின்கம்பத்தில் ஏறும் போது, விளம்பர பலகைகளை கட்ட பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் இதர பொருட்களால், பல நேரங்களில், ஊழியர்கள் காயமடைகின்றனர்.சிறிய அளவிலான பலகைகள் மட்டும் மின்கம்பத்தில் கட்டப்பட்ட நிலை மாறி, தற்போது, 'மெகா சைஸ்' போர்டுகளும், கட்டப்பட்டு, அனைத்து தரப்பினரையும், பயமுறுத்துகின்றன.உடுமலை நகரம் மற்றும் கிராமப்புறங்களில், இத்தகைய விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில், டிரான்ஸ்பார்மரிலும் பலகைகள் கட்டப்பட்டுள்ளன.அதிக காற்று வீசும் காலங்களில், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி ஏற்படும் போது, மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் கட்டப்பட்டுள்ள பலகைகளால், தீ பரவும் அபாயமுள்ளது என மக்கள் அச்சப்படுகின்றனர்.அதிகரித்து வரும் இத்தகைய விதிமீறல்களை கட்டுப்படுத்த, மின்வாரியத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பருவமழை காலங்களில் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் மின்வாரியத்தினர், விளம்பர பலகைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி