உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சதமடித்த ஆர்.கே.எஸ்., அணி வீரர்; ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்

சதமடித்த ஆர்.கே.எஸ்., அணி வீரர்; ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்

கோவை; சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டியில், ஆர்.கே.எஸ்., அணி வீரர் ஒருவர், 102 ரன்கள் விளாச, மற்றொரு வீரர் ஐந்து விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் போட்டி, சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில்நடக்கிறது. ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் ஐ.சி.சி., அணியும், ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த ஆர்.கே.எஸ்., அணியினர், 50 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 269 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் ஜீவா, 102 ரன்களும், பார்த்திபன், 65 ரன்களும், அஸ்வின் பாபு, 56 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் கிரண் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியினரோ, 32.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 133 ரன்கள் எடுத்தனர்.வீரர் ஆதித்யா, 33 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார்.எதிரணி வீரர் ரித்தின் அன்பு ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி, அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை