ஆர்.கே.வி., பள்ளி பொதுத்தேர்வில் அசத்தல்
கோவை: குனியமுத்துார், இடையர்பாளையம் பிரிவில் உள்ள, ஆர்.கே.வி., சீனியர் செகண்டரி பள்ளியில், 1,600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆர்.கே.வி., ஜூனியர் என்ற புதிய பள்ளியும் சுகுணாபுரத்தில் விரைவில் துவங்க இருக்கிறது. மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்த, பல்வேறு இணைக்கல்வி பயிற்சிகளும் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் எவ்வித கட்டணமும் இன்றி, அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மாநில, தேசிய அளவிலான பல்துறை போட்டிகளிலும் மாணவர்கள் சாதித்து வருகின்றனர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகினறனர்.நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதிய, பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில், பிளஸ் 2 மாணவி நவீனா, 94 சதவீதம் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நான்கு மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களும், 15 மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில் மாணவி சுபிக் ஷா 94 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஒன்பது மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களும், 24 மாணவர்கள் 80 சதவீத மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.