மேலும் செய்திகள்
ராஜசந்துரு அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கல்
30-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளை சார்பில், குடிநீர் மற்றும் வெந்நீர் வழங்கும், ஆர்.ஓ. பிளான்ட், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா மற்றும் நகராட்சி தலைவர் சியாமளா முன்னிலை வகித்தனர். ஏ.சி.சி. சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் தலைவர் மணிராஜா, விவேகானந்தா கேந்திரத்தின் நிர்வாகிகள் நாகமணி சேகரன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளையின் நிர்வாகி சுகுமார், ''அம்மா உணவகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருப்போர் அனைவரும் சுத்தமான குடிநீர் அருந்தும் வசதி பெற வேண்டும் என்பதற்காக ஆர்.ஓ. பிளான்ட் வழங்கப்பட்டது,'' என்றார்.
30-Sep-2025