உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலையில் சாலை மறியல்; குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை

ஆனைமலையில் சாலை மறியல்; குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை

பொள்ளாச்சி; ஆனைமலையில், குடிநீர் முறையாக விநியோகிக்க வலியுறுத்தி, பேரூராட்சி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆனைமலை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ள நிலையில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அம்ருத் 2.0 திட்டத்தில், 18 கோடி ரூபாய் மதிப்பில், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், வார்டுகளில், நீண்ட நாள் இடைவெளியில் குடிநீர் வினியோகிப்பதாகக் கூறி, 3வது வார்டு மக்கள், ஆனைமலை - பொள்ளாச்சி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். ஆனைமலை போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.அப்போது, போலீசார் ஒருமையில் பேசியதாக, மக்கள் கோபம் அடைந்தனர். இதனால், போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், மக்களிடம் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, முறையாக தண்ணீர் விநியோகிக்க சம்பந்தப்ப அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்ததன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !