உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் உள்வாங்கியதால் ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

மண் உள்வாங்கியதால் ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

பொள்ளாச்சி : தொடர்ந்து பெய்த மழையால், பொள்ளாச்சி நகர், அன்சாரி வீதியில் மண் உள்வாங்கி, ரோடு சேதமடைந்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், மொத்தம், 147.78 கி.மீ.,க்கு ரோடுகள் உள்ளன. நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகிறது.ஏற்கனவே, நகரின் பல வீதிகளில், ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில், சேதமடைந்தது. ஆங்காங்கே தார் ரோடுகளில் ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்களாக மாறி உள்ளன.அவ்வகையில், பல்லடம் ரோட்டில் இருந்து அன்சாரி வீதி திரும்பும் பகுதியில், மண் உள்வாங்கியதால், ரோடு சேதமடைந்துள்ளது. அவ்வழியே திடீரென சென்று இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கினர். அதனை சீரமைக்க, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறியதாவது:ரோடுகளில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மழை வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்காமல் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட வீதிகளில் ரோடுகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.மழையால் வெள்ளம் தேங்கினால், ரோட்டில் நிலையை கண்டறியவும் முடியவில்லை. எனவே, சேதமடைந்த ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை