சாலை விரிவாக்கம்; 97 பேரிடம் இன்று விசாரணை
அன்னுார் ; கோவை---சத்தி தேசிய நெடுஞ்சாலையில், பசுமை வழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களுக்கு, 3ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 409 பேர் மனு அளித்திருந்தனர். அவர்களிடம், நான்கு கட்டங்களாக விசாரணை நடைபெறுகிறது.இரண்டாம் கட்ட விசாரணை, இன்று காலை அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அபிராமி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். இன்று, அன்னுார் பேரூராட்சி, ஒட்டர்பாளையம், காரேகவுண்டம் பாளையம், அ.மேட்டுப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த 97 பேர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட விசாரணை வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.