உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலை சந்திப்பு மேம்பாடு; பழமையான மரம் மறுநடவு

 சாலை சந்திப்பு மேம்பாடு; பழமையான மரம் மறுநடவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பழமையான மரம், வேரோடு எடுத்து மாற்று இடத்தில் மறு நடவு செய்யப்பட்டது. பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு வழியாக, பல்லடம், திருப்பூர், உடுமலை, பழநி செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு பகுதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, ரோடு சந்திப்பு விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைக்கும் பணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, சந்திப்பு பகுதியில் அரசமரத்தடியில் இருந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டு, விநாயகர் சிலை அருகே உள்ள கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.பறவைகளின் கூடாரமாக இருந்த அரச மரம், கிளைகள் வெட்டப்பட்டு அதே பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே மறு நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மரம் மாற்று நடவு நிபுணர் சையத் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து, பழமையான மரத்தை மறு நடவு செய்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை சந்திப்பை மேம்படுத்தும் வகையில், ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 30 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதற்காக, பழமையான மரம் மாற்று இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது. கடந்தாண்டு, 17 மரங்களும், நடப்பாண்டு ஒரு மரமும் மறுநடவு செய்யப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி