மேலும் செய்திகள்
தீர்வு கிடைக்குமா? ‘கார் பார்க்கிங்’ பணி இழுபறி
17-Nov-2026
வால்பாறை: வால்பாறையில், கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி சார்பில், ஸ்டேன்மோர் சந்திப்பில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் குமரன் ரோடு வரை, கான்கிரீட் ரோடாக மாற்றும் பணி நடக்கிறது. 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 140 மீட்டர் துாரத்திற்கு அமைக்கப்படும் ரோடு பணியை, நகராட்சி பொறியாளர் ஆறுமுகம் இன்று (நவ.,18) துவக்கி வைத்தார். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறை நகரில் ரோடு பணி நடப்பதால், முடீஸ், சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், புதிய பஸ் ஸ்டாண்ட், கரும்பாலம், ஸ்டேன்மோர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். ரோடு பணி முடியும் வரை குமரன் ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும்,’ என்றனர்.
17-Nov-2026