உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழாய் பதிக்கும் பணிக்கு வீதிகள் அடைப்பு ராம் நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தவிப்பு

குழாய் பதிக்கும் பணிக்கு வீதிகள் அடைப்பு ராம் நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தவிப்பு

கோவை : கோவை, ராம்நகர் சரோஜினி வீதியில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, குறுக்கு வீதிகளை அடைப்பதற்கு முன், முன்னறிப்பு செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில், பாரதி பார்க் தொட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை மேம்பாலம், ராம் நகர், சரோஜினி வீதி, சாஸ்திரி வீதி, நஞ்சப்பா ரோட்டில் மேம்பாலத்தை கடந்து செம்மொழி பூங்கா, ஆடீஸ் வீதி, உப்பிலிபாளையம், ஸ்டேட் பாங்க் ரோடு, திருச்சி ரோடு வழியாக சிங்காநல்லுார் செல்லும் வகையில் குழாய் பதிக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் மொத்தம், 14 கி.மீ., துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டும்; 10 கி.மீ., துாரத்துக்கு ஏற்கனவே குழாய் பதிக்கப்பட்டு விட்டது. இன்னும், 4 கி.மீ., துாரத்துக்கு பதிக்க வேண்டியுள்ளது. தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டிய, பிரதான குழாய் இன்னும் 8 கி.மீ., துாரத்துக்கு பதிக்க வேண்டும். தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க, இன்னும், 45 கி.மீ., துாரத்துக்கு பகிர்மான குழாய் பதிக்க வேண்டியிருக்கிறது. வரும் ஆக., மாதத்துக்குள் பணியை முழுமையாக முடிக்க, சூயஸ் நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால், குழாய் பதிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.இதில், நஞ்சப்பா ரோட்டில் இருந்து, ராம்நகர் சரோஜினி வீதி வழியாக பிரதான குழாய் பதிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக இவ்வழித்தடம் அடைக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் விடப்படுகின்றன. ராம்நகர் பகுதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியை அடைத்து, வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.குறுக்கு வீதிகளில் வாகனங்கள், நேருக்கு நேர் எதிர்கொள்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தீர்வு காண, குறுக்கு வீதிகளை அடைக்கும் முன், வாகன ஓட்டிகள் அறியும் வகையில் முன்னறிப்பு வெளியிட வேண்டும் அல்லது அடைக்கும் பகுதியில், மாற்றுப்பாதையில் செல்வதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். வழித்தடம் அடைக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் விடப்படுகின்றன. ராம்நகர் பகுதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியை அடைத்து, வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். குறுக்கு வீதிகளில் வாகனங்கள், நேருக்கு நேர் எதிர்கொள்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை