உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்திரா நகர் கோவிலில் நடந்த திருட்டு முயற்சி

இந்திரா நகர் கோவிலில் நடந்த திருட்டு முயற்சி

போத்தனூர்: சுந்தராபுரம் அருகே அன்னை இந்திரா நகரில், ஜெயமாரியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை, 6:00 மணிக்கு பூசாரி மணிகண்டன், கோயில் கேட்டை திறந்து உள்ளே சென்றார். காவடி அறை கதவு திறந்த நிலையில், அங்கிருந்த முருகர் சிலை சேதமடைந்து, பித்தளையால் ஆன வேல் மாயமாகியிருந்தது. அதுபோல் பொருட்கள் வைக்கும் அறை, கோயில் முன் கதவு ஆகியவை உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக்கிடந்தன. சுந்தராபுரம் போலீசார் விசாரணையில், சப்பரம் செல்வதற்கான வழியில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் ஷீட்டின் மேலேறி உள்ளே வந்த மர்மநபர், திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் மர்ம நபரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி