உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராக் ஸ்பிரேயர் பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்

ராக் ஸ்பிரேயர் பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், அவ்வப்போது, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், வீரல்பட்டியில், 'ராக் ஸ்பிரேயர்' குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:தற்போது, வெள்ளை ஈ பரவல் காரணமாக, தென்னை விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதனால், தென்னை ஓலையில் பரவி இருக்கும் வெள்ளை ஈக்களை, தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிப்பதன் வாயிலாக அதன் எண்ணிக்கை குறையும்.இதற்கு 'ராக் ஸ்பிரேயர்' பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, 49 அடி உயரம் வரையுள்ள தென்னை ஓலைகளுக்கும் தண்ணீர் தெளிக்க முடியும். தோட்டக்கலைத் துறையினர், இதனை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளனர்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை