ரோட்டரி மெட்ரோபாலிஸ் இன்று நாட்டியாஞ்சலி விழா
கோவை; கோவை ரோட்டரி கிளப் மெட்ரோபாலிஸ் சார்பில், 28வது நாட்டியாஞ்சலி விழா, பேரூர் கோவிலில் இன்று துவங்கி, 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்டியாஞ்சலி விழாவில், இந்தியா முழுவதும் இருந்து புகழ்பெற்ற நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். தினமும் மாலை 6.15 மணிக்கு துவங்கி, மூன்று நடன குழுவின் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதில், கோவையில் உள்ள நடனப் பள்ளிகளும் பங்கேற்கின்றன. சென்னையைச் சேர்ந்த குரு ஸ்ரீகிஷோர் மற்றும் பத்மாவதி ஆகியோரின் குச்சுப்புடி நடன குழுவினரின் சிவமோகம், டாக்டர் நீனா பிரசாத்தின் மோகினியாட்டம், ஸ்ரீஷாமா பேட் மற்றும் குழுவினரின் கதக் -நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரோட்டரி மெட்ரோபாலிஸ் குழு எஸ்.குருமூர்த்தி, கே.ஆர்.முரளி, ஷீலேந்திர பன்சாலி, பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் மற்றும் ஒடிசி நடன கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.