உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் அருகில் ரோட்டோர கடைகள் ஆக்கிரமிப்பு; பக்தர்கள் பாதிப்பு

கோவில் அருகில் ரோட்டோர கடைகள் ஆக்கிரமிப்பு; பக்தர்கள் பாதிப்பு

ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீர்

பொள்ளாச்சி நகராட்சி, அரசு மருத்துவமனை எதிரில், இமான் கான் வீதியில் கடைகள் அருகில் இருக்கும் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியில் நடந்து செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்கிறார்கள். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ஜான், பொள்ளாச்சி.

போக்குவரத்துக்கு இடையூறு

பொள்ளாச்சி, சுப்ரமணியசுவாமி கோவில் அருகே அதிக அளவு ரோட்டோர கடைகள் வைத்து வியாபாரம் நடப்பதால், போக்குவரத்து மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, இங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.- - சிவா, பொள்ளாச்சி.

சுகாதாரம் பாதிப்பு

டி.கோட்டாம்பட்டி பம்பிங் ஸ்டேஷன் -3, குட்டை அருகில் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுவதால் வாகன ஓட்டுநர்கள் பயணிக்க சிரமம் ஏற்படுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக இங்கு கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். - - டேவிட், பொள்ளாச்சி.

சேதம் அடைந்த ரோடு

சூளேஸ்வரன்பட்டி, தனியார் பள்ளி அருகே உள்ள ரோடு மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் என பலர் இவ்வழியில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதை அதிகாரிகள் கவனித்து, மக்கள் நலன் கருதி விரைவில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- நரிமுருகன், பொள்ளாச்சி.

பாலத்தில் அதிகரிக்கும் போஸ்டர்

கிணத்துக்கடவு மேம்பால துாண்களில், கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த விளம்பர போஸ்டர்கள் அதிகரிப்பால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றம் செய்ய வேண்டும். துாண்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - பாண்டியன், கிணத்துக்கடவு.

சுகாதார சீர்கேடு

உடுமலை, அண்ணா குடியிருப்பு பகுதியில் குப்பைக்கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ளன. தெருநாய்கள் கழிவுகளை இழுத்து ரோட்டில் போடுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திறந்த வெளியில் கழிவுகள் கொட்டப்படுவதால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.- ஜெயக்குமார், உடுமலை.

சாய்ந்த உயர்மின்விளக்கு

உடுமலை ஏரிப்பாளையம் மின்வாரிய அலுவலம் பின்புறம் உள்ள உயர்மின்விளக்கு சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும்போது பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆபத்து ஏற்படும் முன், சாய்ந்துள்ள மின்விளக்கை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஸ்வரி, உடுமலை.

புதரை அகற்றணும்

உடுமலை, ராமசாமி நகர் பகுதியில், ரிசர்வ் இடங்கள் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் செடிகள் புதர் போல வளர்ந்துள்ளது. அருகிலுள்ள குடியிருப்புகளில் புதர் செடிகளிலிருந்து விஷப்பூச்சிகள் வருகின்றன. குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாமல் உள்ளது.- செந்தில், உடுமலை.

சேதமான இரும்பு மூடி

உடுமலை-பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில், பஸ் டிப்போ எதிர்புறம் புதிதாக போடப்பட்டுள்ள தார் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்கான குழியில் இரும்பு மூடி போடப்பட்டுள்ளது. இந்த மூடி வளைந்து சிதிலமடைந்துள்ளது. வாகனங்கள் அதன் மீது ஏறி செல்கின்றன. விபத்து ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாலாஜி, உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ