மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
3 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
4 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
4 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
5 hour(s) ago
கோவை:ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் ரோட்டுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாளுக்கு நாள் குப்பைகள் குவிந்து வருகின்றன.கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், தினமும் காலையும் மாலையும் பல ஆயிரம் மக்கள் 'வாக்கிங்' செல்கின்றனர். மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.41 கோடி மதிப்பில், நடைபாதை மற்றும் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில், பல்வேறு அலங்காரக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.இதனால் காலை, மாலை நேரத்தில் மட்டுமின்றி, பகல் முழுவதும் ஏராளமான மக்கள், இந்தப் பகுதிக்கு பொழுதுபோக்க வருகை தருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நடைபாதை மற்றும் ரோட்டோரப் பகுதிகளில், தள்ளுவண்டி மற்றும் ரோட்டோரக் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வாகனங்களில் வந்தும் பலர் கடை போட்டு வருகின்றனர்.பெரும்பாலும் உணவுப் பொருட்கள் விற்பனையே அதிகம் நடக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், சூப், சுண்டல், கடலை, மாங்காய், குல்பி என பல்வேறு உணவுப் பொருட்களும் விற்கப்படுகின்றன. இவற்றை உண்போர், பேப்பர், கப், பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே எறிந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் குப்பைகள் அதிகமாகி வருகின்றன.இந்த கடைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், குப்பைகள் போடுவோரைத் தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 'வாக்கிங்' செல்வோர் வேண்டுகோள் விடுக்கின்றனர். அத்துடன் இந்த நடைபாதையை ஒட்டியுள்ள பூங்காக்களில், இரவு நேர அலங்கார விளக்குகள் பழுதாகியுள்ளன. சொட்டு நீர் மற்றும் ஸ்பிரிங்ளர் முறையில் தண்ணீர் பாய்ச்சும் குழாய்களும் பழுதடைந்துள்ளன.இவை அனைத்தையும் சரி செய்து, துாய்மைப் பராமரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அப்பகுதி குடியிருப்புவாசிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago