போலி பட்டா வாயிலாக ரூ.50 லட்சம் கடன்; போலீசில் புகார்
கோவை; போலி பட்டா தயாரித்து ரூ.50 லட்சம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.கோவை இருகூர் வேடர் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.மனுவில், தனது வீட்டுக்கான பட்டா, 50 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. வீட்டுக்கடனுக்காக அணுகிய போது, வீட்டு பட்டா வேறு ஒரு நபரால் தயாரிக்கப்பட்டு, ரூ.50 லட்சம் கடன் பெற்றது தெரிந்தது. போலியாக பட்டா, அரசு முத்திரையை பயன்படுத்தி, ரூ.50 லட்சம் பெற்ற நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போலி பட்டா, பத்திரத்தை ரத்து செய்து, அசல் ஆவணங்களின் உண்மைத்தன்மையை மீட்டுத்தர வேண்டும் என, கோாரியுள்ளார்.